search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணப்பட்டுவாடா புகார்"

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சென்னை:

    ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை?

    ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை? அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?

    வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

    எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    ×